கடைசி போட்டியில் தடை விதிக்காமல் இருந்திருந்தால்.... - ரிஷப் பண்ட் பேட்டி


கடைசி போட்டியில் தடை விதிக்காமல் இருந்திருந்தால்.... - ரிஷப் பண்ட் பேட்டி
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 15 May 2024 3:45 AM GMT (Updated: 15 May 2024 6:48 AM GMT)

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டெல்லி,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக போரெல் 58 ரன், ஸ்டப்ஸ் 57 ரன் எடுத்தனர்.

லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன், அர்ஷத் கான் 33 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயமாக எங்களுக்கு பூரன் ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்கினார். எங்களிடம் சில திட்டங்கள் இருந்தது, நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானதாகவும் இருந்தது. நாங்கள் தொடர்ந்து நல்ல பந்துகளை வீசினோம். இந்த சீசனின் ஆரம்பத்தில் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது.

சில காயங்கள் வந்த போதும் கூட, நாங்கள் கடைசி வரை போட்டி போட்டு தொடரில் இருந்தோம். எனக்கு கடைசி போட்டியில் தடை விதிக்காமல் இருந்திருந்தால், (பெங்களூருக்கு எதிரான போட்டி) நிச்சயம் நாங்கள் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புகள் இருந்திருக்கும்.

தனிப்பட்ட முறையில் திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதரவை பார்க்கும் பொழுது மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒன்றரை வருடங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் களத்தில் இருக்க விரும்புகிறேன், எதையும் தவறவிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story