"எம்எஸ் தோனி கேப்டனாக இல்லை என்றால், அவர் விளையாட மாட்டார்...": -விரேந்திர சேவாக்
ஐபிஎல் 2023 சீசனுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா என்பதை தோனி இன்னும் வெளிப்படுத்தவில்லை.
அகமதாபாத்,
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதவுள்ளன.இந்நிலையில் சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டன் தல தோனிக்கு இதுதான் கடைசி ஆட்டம் என பலரும் கூறிவருகின்றனர்.அவர் இது கூறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.
தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறுகையில்,
நீங்கள் உடற்தகுதியுடன் இருந்தால் (40-வயதில்கிரிக்கெட் விளையாடுவது) கடினம் அல்ல. எம்.எஸ். தோனி இந்த ஆண்டு அதிகம் பேட்டிங் செய்யவில்லை அதனால் முழங்கால் காயம் அதிகரிக்கவில்லை. அடிக்கடி கடைசி இரண்டு ஓவர்களில் அவர் வருவார்.
அவர் எதிர்கொண்ட மொத்த பந்துகளை நான் எண்ணுகிறேன், இந்த சீசனில் அவர் 40-50 பந்துகளை எதிர்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன், "என்று சேவாக் கூறினார்.
மேலும் இம்பாக்ட் வீரர் விதிமுறை மூலம் தோனி இன்னும் சில காலம் விளையாட முடியும் என்ற சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோவின் கருத்தையும் மறுத்துள்ளார்.
அதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில்;
கேப்டனாக மட்டுமே தோனி ஆடுகிறார். கேப்டன் பதவிக்கு அவர் மைதானத்தில் இருக்க வேண்டும். இம்பாக்ட் ப்ளேயர் விதி என்பது களமிறங்காத, ஆனால் பேட் செய்யும் ஒருவருக்கு அல்லது பேட் செய்யத் தேவையில்லாத பந்து வீச்சாளருக்கானது.
தோனி 20 ஓவர்கள் களமிறங்க வேண்டும்;அவர் கேப்டனாக இல்லாவிட்டால், இம்பாக்ட் பிளேயராக கூட விளையாட மாட்டார்.அதனால் நீங்கள் அவரை அடுத்து வரும் ஐபிஎல் சீசன்களில் வழிகாட்டியாகவோ அல்லது பயிற்சியாளராகவோ அல்லது கிரிக்கெட் இயக்குனராகவோ பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் 2023ன் இறுதிப்போட்டி தல தோனியின் கடைசி ஆட்டம் என கருதப்படுவதால் கோப்பையுடன் அவரை வழியனுப்ப சென்னை அணியின் வீரர்கள் மற்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.