இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் வெற்றி பெற விரும்பினால்... - பிரையன் லாரா அறிவுரை


இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் வெற்றி பெற விரும்பினால்... - பிரையன் லாரா அறிவுரை
x

Image Courtesy : IPL

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீட்டிக்கும். தோல்வி கண்டால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் வெற்றி பெற விரும்பினால் பும்ராவை எதிர்த்து எதையும் செய்ய வேண்டாம் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பும்ரா வெளிப்படையாக ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவரைப் போன்று பந்துவீச்சாளர்கள் ஒரு சிலரே.

நான் இதை இரண்டு நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டேன். அவர் வெஸ்ட் இண்டிஸில் தங்க விரும்பினால், அவருக்கு உடனடியாக பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யலாம். பின்பு சில காலம் கழித்து அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடவும் செய்யலாம். ஆனால் இதை நகைச்சுவைக்காகச் சொல்கிறேன்.

மற்ற அணியின் வீரர்கள், பேட்ஸ்மேன்கள், அணி மேனேஜர்கள் எல்லோரும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், இவர்கள் யாருமே போட்டியில் பும்ராவுக்கு எதிராக அடித்து ஆட வேண்டும் என்று நினைக்க கூடாது. இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் வெற்றி பெற விரும்பினால், பும்ராவை எதிர்த்து எதையும் செய்ய வேண்டாம்.

அவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது உங்களுக்கு தெரியும். அம்ப்ரோஸ், மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் வரிசையில் அவரும் ஒருவர். நீங்கள் அவருக்கு எதிராக எதுவும் செய்ய கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story