ஐ.சி.சி. ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு


ஐ.சி.சி. ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
x

Image Courtesy: @ICC 

ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதில் வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் ஹர்ஷிதா சமரவிக்ரம, அயர்லாந்தின் கேபி லூயிஸ், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story