கடைசி ஓவரில் வைடு யார்க்கர்களை வீச விரும்பினேன் மேலும்...- அவேஷ் கான் பேட்டி


கடைசி ஓவரில் வைடு யார்க்கர்களை வீச விரும்பினேன் மேலும்...- அவேஷ் கான் பேட்டி
x

Image Courtesy: @rajasthanroyals

தினத்தந்தி 29 March 2024 12:02 PM IST (Updated: 29 March 2024 3:27 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அவேஷ் கான் ஆறு பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதன் காரணமாகவே ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் கடைசி ஓவர் குறித்து பேசிய அவேஷ் கான் கூறியதாவது,

கடைசி ஓவரின் போது என்னுடைய திட்டம் தெளிவாக இருந்தது. அதாவது மைதானத்தின் ஒரு புறம் பெரியதாக இருந்ததால் நான் வைடு யார்க்கர் பந்தை வீச முயற்சித்தேன். மேலும் ஒவ்வொரு பந்துக்கு முன்னதாகவும் 5 நொடிகள் யோசித்து அதன்படியே செயல்பட்டேன்.

எங்களது அணியில் ட்ரென்ட் பவுல்ட், பர்கர், சந்தீப் சர்மா போன்ற வீரர்கள் இருப்பதினால் அவர்களிடம் இருந்தும் நான் நிறைய விசயங்களை கற்று வருகிறேன். அதோடு டீம் மேனேஜ்மென்ட்டும் எனக்கு ஆதரவு வழங்கி ஊக்கப்படுத்தி வருவதால் என்னுடைய திறனை நான் முன்னேற்றி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story