நான் நன்றாக விளையாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால்... - யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான் சதமடித்திருந்தால் அது அபாரமானதாக இருந்திருக்கும் ஆனால் சில நேரங்களில் அதிரடியாக விளையாடுவது வேலை செய்யும். சில நேரங்களில் செய்யாது என இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆம். நான் நன்றாக விளையாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் சதமடித்திருந்தால் அது அபாரமானதாக இருந்திருக்கும் ஆனால் அங்கே என்னுடைய செயல்பாடு மற்றும் சிந்தனையை நான் எடுத்து வந்தேன். சில நேரங்களில் அதிரடியாக விளையாடுவது வேலை செய்யும். சில நேரங்களில் செய்யாது.
சில நேரங்களில் நான் செய்த தவறால் அவுட்டாகலாம். ஆனால் அந்த தவறிலிருந்து நான் பாடங்களை கற்க முயற்சிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இங்கிலாந்து ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்பது என்னுடைய யுக்தி கிடையாது. மாறாக சில பந்துகளுக்கு எதிராக நேர்மறையான ஷாட்களை அடிக்க வேண்டும் என்பதே என்னுடைய சிந்தனையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி தொடக்கத்தை கொடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்தில் 80 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.