2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவதற்கு இவர் கூறிய வார்த்தைகள்தான் காரணம் - முகமது ரிஸ்வான்


2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவதற்கு இவர் கூறிய வார்த்தைகள்தான் காரணம் - முகமது ரிஸ்வான்
x

Image Courtesy: AFP

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி அயர்லாந்தையும், 9ம் தேதி பாகிஸ்தானையும், 12ம் தேதி அமெரிக்காவையும், 15ம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதுவரை நடைபெற்று இருக்கும் ஐ.சி.சி உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி ஒரே ஒரு முறை மட்டும் (2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. அப்பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள். பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவதற்கு அப்போதைய பாகிஸ்தான் வாரியத்தின் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறிய வார்த்தைகள் தான் காரணம் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

அதற்கு முன் நாங்கள் இந்தியாவை உலகக் கோப்பையில் தோற்கடித்ததில்லை. அப்போது எங்களை சந்தித்த ரமீஸ் ராஜா நீங்கள் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த உலகக் கோப்பைக்கு முன்பாகவே பாகிஸ்தான் வாரிய தலைவராக எங்களை சந்தித்த அவர் அந்த எண்ணத்தை உருவாக்கத் துவங்கினார். உலகக் கோப்பை நெருங்கியதும் நீங்கள் கோப்பையை வெல்கிறீர்களோ இல்லையோ ஆனால் இந்தியாவிடம் தோற்காதீர்கள் என்று அவர் எங்களிடம் சொன்னார்.

மேலும் அழுத்தத்திற்கு கீழே வராதீர்கள் என்று சொன்னார். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே அழுத்தத்துடன் வரும். உலகக் கோப்பையின் மற்ற போட்டிகளை அனைவரும் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த போட்டியை அனைவரும் உட்கார்ந்து பார்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story