தெறிக்கவிட்ட ஐதராபாத் பேட்ஸ்மென்கள்; 6 ஓவரில் 125 ரன்கள் குவிப்பு
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து ஐதராபாத் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இரு வீரர்களும் டெல்லி பந்து வீச்சை தெறிக்கவிட்டனர். இருவரும் பவுண்டரிகள், சிக்சர்களாக தெறிக்கவிட்டனர். பவர்பிளேயான முதல் 6 ஓவர்கள் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. 6 ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 பந்துகளில் 84 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர்.
தற்போது 6.2 ஓவரில் ஐதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்துள்ளது. ஹெட் 84 ரன்களுடனும், மார்க்ரம் 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார்.
ஐ.பி.எல். வரலாற்றில் பவர்பிளேயில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்கள் (125 ரன்கள்) என்ற வரலாற்று சாதனையை ஐதராபாத் நிகழ்த்தியுள்ளது.