குர்பாஸ் அபார சதம்... தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்


குர்பாஸ் அபார சதம்... தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
x

image courtesy: twitter/@ICC

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

சார்ஜா,

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ரியாஸ் ஹசன் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியாஸ் ஹசன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ரஹ்மட் ஷா, குர்பாசுடன் இணைந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய குர்பாஸ் 105 ரன்களிலும் ரஹ்மட் ஷா அரைசதம் அடித்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் அதிரடியாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.


Next Story