சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு
x

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் கிரேக் பார்கிளே கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று கிரேக் பார்கிளே ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜிம்பாப்வேயை சேர்ந்த முகுலானி விலகியதால் அவர் ஒருமனதாக தேர்வானார். அவரது பதவி காலம் 2 ஆண்டு ஆகும். இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட 17 நாட்டு வாரியங்கள் கிரேக் பார்கிளேவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐ.சி.சி.நிதி மற்றும் வணிக விவகாரங்கள் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு வழக்கமாக ஐ.சி.சி. போர்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.சி.சி. போர்டில் அங்கம் வகிப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான கங்குலி ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story