இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றியை நடனமாடி கொண்டாடிய இந்திய முன்னாள் வீரர்கள்...!


இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றியை நடனமாடி கொண்டாடிய இந்திய முன்னாள் வீரர்கள்...!
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

புனே,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்களே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடியது.

ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக ஆடி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 242 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பெற்ற 3வது வெற்றி இதுவாகும். அந்த அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் நடனமாடி கொண்டாடி உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story