விமான சாகசம், கலை நிகழ்ச்சி...! பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டி...!


விமான சாகசம், கலை நிகழ்ச்சி...! பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டி...!
x

புதிய உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்நிலையில் புதிய உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் தனது 6வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் இறுதிப் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமான முறையில் 4 கட்டங்களாக நடத்தசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பிசிசிஐ-யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.அந்த வகையில், நாளைய போட்டிக்கு முன் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மதியம் 1.35-க்கு துவங்கும் சாகச நிகழ்ச்சி 1.50 மணி வரை நடைபெற இருக்கிறது. பிறகு, போட்டியின் முதல் இன்னிங்ஸ் தேநீர் இடைவேளையின் போது ஆதித்யா காத்வியின் இசை கச்சேரி நடைபெறுகிறது. பின் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது ப்ரிதம் சக்ரபோர்த்தி, ஜோனிதா காந்தி, நாகாஷ் அசிஸ், அமித் மிஸ்ரா, ஆகாசா சிங் மற்றும் துஷர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிறகு 2-வது இன்னிங்ஸ்-இன் தேநீர் இடைவேளையின் போது லேசர் மற்றும் லைட் ஷோ நடைபெறுகிறது.


Next Story