88 ஆண்டுகால ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை - ஜெய்தேவ் உனத்கட் புதிய சாதனை...!


88 ஆண்டுகால ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை - ஜெய்தேவ் உனத்கட்  புதிய சாதனை...!
x

Image Courtesy: Twitter 

தினத்தந்தி 3 Jan 2023 3:10 PM IST (Updated: 3 Jan 2023 5:23 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி அணிக்கு எதிரான நடைபெற்று வரும் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் உனத்கட் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

டெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருக்கிறது. இதில் இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அந்த அணியின் கேப்டன் யாஷ் துல் அற்வித்தார். இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துருவ் ஷோரே மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் களம் புகுந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை சவுராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் வீசினார்.

டெல்லி அணியினர் முதல் 2 பந்துகளில் ரன் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து வீசிய 3வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரேவை உனத்கட் போல்டாக்கினார். இதையடுத்து ராவல் களம் புகுந்தார். தனது கிரிக்கெட் அனுபவத்தி வெளிப்படுத்திய உனத்கட் ராவல் சந்தித்த முதல் பந்திலேயே அவரை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.

ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள வந்த டெல்லி அணியின் கேப்டன் யாஷ் துல்லை உனத்கட் எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இதன் மூலம் உனத்கட் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு தனது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை மளமளவென எடுத்தார் உனத்கட்.

ஒரு கட்டத்தில் 53 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணி 100 ரன்களை தொடுமா என நினத்திருந்த வேளையில் ஹிரித்திக் ஷோக்கீன், ஷிவ்னாக் இணை 9 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாகா ஆடிய ஷோக்கின் அரைசதன் அடித்தார். மறுபக்கம் பொறுமையாக ஆடி வந்த ஷிவ்னாக் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி 35 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உனத்கட் மொத்தமாக 8 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தினார். ஷிராக் ஜானி, ப்ரேராக் மன்கட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையை உனத்கட் படைத்தார்.

தனது 19 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான உனத்கட் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தனது 2வது டெஸ்ட் போட்டியை ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story