வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்
வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி சென்னை வருகிறார்கள்.
சென்னை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், பும்ரா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். நாளை முதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள்.
#WATCH | Tamil Nadu: Indian cricket team arrives at Chennai Airport ahead of the Test match against Bangladesh.
— ANI (@ANI) September 12, 2024
The Test match is scheduled to start from September 19. pic.twitter.com/oDwRfMBcQX