முதல் டி20: அயர்லாந்தை எளிதில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
அபுதாபி,
அயர்லாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் சேர்த்தது. கர்ட்டிஸ் காம்பர் 36 பந்தில் 49 ரன்களும், நீல் ராக் 28 பந்தில் 37 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பாட்ரிக் க்ருகெர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டல் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ரீசா ஹென்ரிக்ஸ் 33 பந்தில் 51 ரன்கள் விளாசினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 17.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரு அணிகளுக்கும் இடையலிான 2-வது போட்டி நாளை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் அபுதாயில் நடக்கிறது.