முதல் டி20 போட்டி: இந்திய பெண்கள் அணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்...!


முதல் டி20 போட்டி: இந்திய பெண்கள் அணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்...!
x

Image Courtesy: @BCCIWomen

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு அந்நாட்டு பெண்கள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்று வரும் முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷதி ராணி, ஷமிமா சுல்தானா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஷதி ராணி 22 ரன்னும், ஷமிமா சுல்தானா 17 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய சோபனா மோஸ்தரி 23 ரன்னிலும், நிகர் சுல்தானா 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வங்கதேச பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி ஆட உள்ளது.


Next Story