இந்தியா - இலங்கை|India vs Sri Lanka

முதல் டி20 - இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்


முதல் டி20 - இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்
x

புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது

கொழும்பு,

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை பல்லகெலேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதன்பின் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று டி20 தொடரை வென்றது.தற்போது பலம் வாய்ந்த இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கிறது.

புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது. இதில் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், சண்டி மால், நிசாங்கா, குசால் பெரைரா, பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஹசரங்கா, ஷனகா, பந்து வீச்சில் மதுஷனகா, பினுரா பெர்னாண்டோ, தீக்ஷனா, பதிரனா ஆகியோரும் உள்ளனர்.


Next Story