முதல் டி20 : ஹேசில்வுட் ,ஸ்டார்க் அபார பந்துவீச்சு : இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டும் ,ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்
கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.அதன்படி இரு அணிகளும் மோதும் இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்து.அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .12 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரன்கள் எடுக்க தடுமாறியது .
இதனால் இலங்கை 19.3 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அந்த அணியில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 38 ரன்களும் ,பதும் நிசங்கா 36 ரன்களும் எடுத்தனர் .
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டும் ,ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 129 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது