இலங்கை - ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி - மழை காரணமாக ஆட்டம் ரத்து..!


இலங்கை - ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி - மழை காரணமாக ஆட்டம் ரத்து..!
x

Image Courtesy: @OfficialSLC

இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா (101 ரன்) சதம் அடித்து அசத்தினார்.

கொழும்பு,

ஜிம்பாப்பே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொலம்புவில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா 101 ரன், மற்றும் குசல் மெண்டிஸ் 46 ரன் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ங்கராவா, ப்ளெசிங் முசரபானி , பராஸ் அக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது.

ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கைதானோ, டினாஷே கமுன்ஹுகம்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கமுன்ஹுகம்வே மற்றும் அடுத்து களம் இறங்கிய கிரேக் எர்வின் இருவரும் டக் அவுட் ஆகினர். இதையடுத்து மில்டன் ஷும்பா களம் இறங்கினார். ஜிம்பாப்வே அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.

மழை நின்ற பின்னர் ஆட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெயததால் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 8ம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது.


Next Story