முதல் ஒருநாள் போட்டி; அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு... விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!


முதல் ஒருநாள் போட்டி; அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு... விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
x

image courtesy; twitter/ @BCCI

தினத்தந்தி 17 Dec 2023 2:53 PM IST (Updated: 17 Dec 2023 3:01 PM IST)
t-max-icont-min-icon

முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெறும் முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடித்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அவரது பந்துவீச்சில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் இருவரும் டக் அவுட் ஆகினர். மேலும் டோனி டி சோர்ஜி 28 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 6 ரன்களிலும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சுக்கே இரையாகினர்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கானும் தனது பங்குக்கு தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம், வியான் முல்டர் மற்றும் டேவிட் மில்லர் மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 60 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 3 ரன்களுடனும், கேசவ் மகாராஜ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.


Next Story