16 பந்துகளில் அரைசதம்... இங்கிலாந்து வீரர் மொயீன் அலி சாதனை


16 பந்துகளில் அரைசதம்... இங்கிலாந்து வீரர் மொயீன் அலி சாதனை
x

இங்கிலாந்து வீரர்களில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை மொயீன் அலி படைத்தார்.

பிரிஸ்டல்,

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. ஜானி பேர்ஸ்டோ 90 ரன்களும் (53 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்), மொயீன் அலி 52 ரன்களும் (18 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதில் மொயீன் அலி 16 பந்துகளில் அரைசதத்தை எட்டி இங்கிலாந்து வீரர்களில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 193 ரன்களே எடுக்க முடிந்தது. ரீஜா ஹென்ரிக்ஸ் (57 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (72 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, 8 சிக்சர்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story