ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் - ஷாஹீன் அஃப்ரிடி சாதனை


ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் - ஷாஹீன் அஃப்ரிடி சாதனை
x

Image courtesy: cricbuzz

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை ஷாஹீன் அஃப்ரிடி படைத்துள்ளார்..

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகள் மோதிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் வங்காளதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.தொடக்க ஆட்டக்காரர் டான்சித் ஹசன் (0), நஜ்முல் ஹுசேன் சாண்டோ (4), அனுபவ வீரர் முஷ்பிகூர் ரஹீம் (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது.

இதனை தொடர்ந்து லிட்டன் தாஸ்- மகமதுல்லா ஜோடி, அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டது. லிட்டன் தாஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மகமதுல்லா அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்களும், மெஹதி ஹசன் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த போட்டியில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கட்டைகளை கைப்பற்றினார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 51 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதனை ஷாகீன் அப்ரிடி தகர்த்து எறிந்தார்.

குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்,

51 - ஷாஹீன் ஷா அப்ரிடி*

52 - மிட்செல் ஸ்டார்க்

54 - ஷேன் பாண்ட்

54 - முஸ்தபிசுர் ரஹ்மான்

55 - பிரட் லீ

56 - டிரென்ட் போல்ட்

56 - முகமது ஷமி

57 - ஜஸ்பிரித் பும்ரா

57 - மாட் ஹென்றி


Next Story