400 ரன்களுக்கு மேல் அடித்தும் தோல்வி: நியூசிலாந்து கேப்டன் வேதனை
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 400 ரன்கள் அடித்தும் மழையின் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
பெங்களூர்,
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து நியூசிலாந்து கேன் வில்லியம்சன் கூறியதாவது:
400 ரன்களுக்கு மேல் அடித்தும் நாங்கள் தோல்வியை தழுவியது என்பது எங்கள் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எனினும் இதை நாங்கள் நல்ல விஷயமாகவே கருதுகிறோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் அபாரமாக விளையாடினோம். இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற எங்களுக்கு நாங்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக பக்கர் சாமானின் ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த வெற்றி அவர்களுக்கு உரியதாகவே நான் கருதுகிறேன்.
வானிலையும் இன்றைய ஆட்டத்தில் ஒரு பெரிய பங்கை ஆற்றியது. இருந்தாலும் நான் மழையை காரணமாக சொல்ல விரும்பவில்லை. இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் முழு தகுதியானவர்கள். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அடுத்த போட்டிக்கு நகர்ந்து செல்ல வேண்டும். இந்த மைதானத்தில் 450 ரன்கள் அடிக்கும் வேண்டும் என நினைக்கிறேன். இது போன்ற சிறிய மைதானங்களில் விளையாடும் போது பந்துவீச்சாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ரச்சின் ரவிந்த்ரா பேட்டிங் இல் சிறந்து விளங்கினார். அவருடைய பார்ம் இந்த தொடர் முழுவதும் தொடரும் என நம்புகிறேன். இது போன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது எப்படியாவது ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் மைதானத்தில் அளவு சிறியதாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணி இன்று வெற்றி பெற்றிருக்கிறது என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.