இங்கிலாந்து வெற்றி: ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
பர்மிங்காம்,
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையில்லான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் அணிகள் மாற்றமின்றி அதே வரிசையில் தொடருகின்றன. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த 3-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து கூடுதலாக புள்ளிகள் பெற்ற நிலையில், அதே 6-வது இடத்தில்தான் தொடருகிறது.
இந்த பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:
1. இந்தியா - 68.52 சதவீதம்
2. ஆஸ்திரேலியா - 62.50 சதவீதம்
3. நியூசிலாந்து - 50.00 சதவீதம்
4. இலங்கை - 50.00 சதவீதம்
5. பாகிஸ்தான் - 36.66 சதவீதம்
6. இங்கிலாந்து - 36.54 சதவீதம்
7. தென் ஆப்பிரிக்கா - 25.00 சதவீதம்
8. வங்காளதேசம் - 25.00 சதவீதம்
9. வெஸ்ட் இண்டீஸ் - 19.05 சதவீதம்