இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு..!!


இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு..!!
x

image courtesy; twitter/@ICC

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

லண்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளும் நியூசிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளன. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த தொடரை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி நியூசிலாந்து முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளெயிங் 11 பின்வருமறு;-

நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டிம் சவுத்தி, பென் லிஸ்டர்

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் குர்ரன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி.


Next Story