துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: தெற்கு மண்டல அணி 213 ரன்னில் 'ஆல்-அவுட்'
தெற்கு மண்டல அணி 78.4 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து இருந்தது.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தெற்கு மண்டல அணி 78.4 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் 22 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேற்கு மண்டலம் தரப்பில் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டும், நவாஸ்வல்லா, சின்டான் கஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி நேற்றைய முடிவில் 45 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து தடுமாறியது. பிரித்வி ஷா (65 ரன்), ஹர்விக் தேசாய் (21 ரன்) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. தெற்கு மண்டலம் தரப்பில் வித்வாத் கவீரப்பா 4 விக்கெட்டும், விஜய்குமார் வைஷாக் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.