அறிமுகம் ஆன முதல் இன்னிங்சிலேயே சாதனை பட்டியலில் இடம்பிடித்த துருவ் ஜூரேல்


அறிமுகம் ஆன முதல் இன்னிங்சிலேயே சாதனை பட்டியலில் இடம்பிடித்த துருவ் ஜூரேல்
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 16 Feb 2024 8:52 AM GMT (Updated: 16 Feb 2024 8:55 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துருவ் ஜூரேல் 46 ரன்கள் அடித்தார்.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுக வீரர் துருன் ஜூரேல் இடம்பிடித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்களும் , ஜடேஜா 112 ரன்களும் குவித்தனர்.

இதில் இந்திய அணி தரப்பில் பேட்டிங் செய்த துருவ் ஜூரேல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன முதல் இன்னிங்சிலேயே அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களின் சாதனை பட்டியலில் இவர் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அந்த பட்டியலில் கே.எல். ராகுல் 101 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்;-

1.கே.எல்.ராகுல் - 101 ரன்கள்

2. திலாவார் உசேன் - 59 ரன்கள்

3. துருவ் ஜூரேல் - 46 ரன்கள்

4.நயன் மோங்கியா - 44 ரன்கள்


Next Story