தோனியின் வியூகம் நன்றாக இருக்கும்: மொயீன் அலி


தோனியின் வியூகம் நன்றாக இருக்கும்: மொயீன் அலி
x
தினத்தந்தி 9 March 2024 1:10 AM IST (Updated: 9 March 2024 6:03 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வீரராக எனக்கு என்ன மாதிரி ரோல் வைத்திருக்கிறார் என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாக மொயீன் அலி கூறினார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவருமான 36 வயதான மொயீன் அலி அளித்த ஒரு பேட்டியில், 'சென்னை சூப்பர் கிங்சின் கேப்டன் டோனி சிறப்பு வாய்ந்த ஒரு வீரர், சிறப்பான ஒரு கேப்டன் என்பதை அனைவரும் அறிவர். டோனியின் தலைமையின் கீழ் நீங்கள் சென்னை அணிக்காக ஆடும் போது அந்த அணி பலவீனமாகவோ அல்லது பலமாக எப்படி தெரிந்தாலும் சரி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகி விடும்.

சென்னை அணிக்காக இதுவரை 3 சீசனில் விளையாடி உள்ளேன். ஆனால் அவர் எந்த மாதிரி திட்டமிடலுடன் செயல்படப்போகிறார் என்பது எனக்கு தெரியாது. அவரது வியூகம் உண்மையிலேயே நன்றாக இருக்கும். ஒரு வீரராக எனக்கு என்ன மாதிரி ரோல் வைத்திருக்கிறார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்' என்றார்.


Next Story