டெல்லி டெஸ்ட்: 2ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 88-4
இந்திய அணி 2-ம் நாள் உணவு இடைவேளை வரை 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடி வருகிறது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரோகித் சர்மா (32), ராகுல் (17), புஜாரா (0), ஸ்ரேயஸ் அய்யர் (4) ஆகியோரை லயன் தனது சுழலில் அவுட்டாக்கினார். இந்திய அணி 2-ம் நாள் உணவு இடைவேளை வரை 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலியும், ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 175 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.
Related Tags :
Next Story