சி.எஸ்.கே அனைத்து போட்டிகளையும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது - டெல்லி வீரர் கருத்து


சி.எஸ்.கே அனைத்து போட்டிகளையும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது - டெல்லி வீரர் கருத்து
x

Image Courtesy: @ChennaiIPL

தினத்தந்தி 1 April 2024 4:10 AM GMT (Updated: 1 April 2024 5:11 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் இறுதிகட்டத்தில் வெற்றிக்காக போராடிய தோனி 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். தோனிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் தோனிக்கும், சி.எஸ்.கே அணிக்கும் உற்சாக வரவேற்பும், ஆதரவும் கொடுத்து வருகின்றனர். அந்த வரவேற்பும், ஆதரவும் உள்ளூர் (சென்னை மைதானம்) மட்டுமின்றி சென்னை அணி விளையாடும் அனைத்து மைதானங்களிலும் கிடைக்கிறது. அதன்படி விசாகப்பட்டினத்தில் டெல்லிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.

விசாகப்பட்டினம் டெல்லிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும் அங்கு சி.எஸ்.கே ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி அனைத்து போட்டிகளையும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது என டெல்லி வீரர் கலீல் அஹமது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வெற்ற கலீல் அஹமது இது தொடர்பாக கூறியதாவது, முதலில் நான் ஒன்று சொல்ல விரும்பிகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் தங்கள் ஐ.பி.எல் போட்டிகளை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. அதை நாங்களும் மதிக்கிறோம், அனுபவிக்கிறோம்.

அவர் (தோனி) எங்கள் கேப்டனாக இருப்பதால் இது வேடிக்கையாக உள்ளது. ஆனால் ஒரு சில டெல்லி ரசிகர்களும் இருந்தனர். அவர்கள் போட்டியின் போது எங்கள் அணிக்கு ஆதரவாக வந்தனர். போட்டி முடிவில் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அணியில் உள்ள அனைவரின் முகத்திலும் புன்னகை இருக்கிறது, வெற்றிக்குப் பிறகு முகாமில் மனநிலையும் நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story