சி.எஸ்.கே அணியில் மீண்டும் இணைந்த கான்வே...? - வெளியான தகவல்

Image Courtesy: @ChennaiIPL
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த டெவான் கான்வே காயம் காரணமாக விலகினார்.
சென்னை,
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த டெவான் கான்வே காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சி.எஸ்.கே அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்னும் சில நாட்களில் அணியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப ரிச்சர்ட் கிலீசன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டெவான் கான்வே மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடருக்கு டெவான் கான்வேவை தயார் செய்யும் பொறுப்பை சி.எஸ்.கே நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது காயத்தை குணப்படுத்தி மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதியை மீட்க பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.