இந்திய வீரர்கள் குறித்த சேத்தன் சர்மா உளறல்கள்...! ஆஸ்திரேலியா மீடியா சதியா...!


இந்திய வீரர்கள் குறித்த சேத்தன் சர்மா உளறல்கள்...! ஆஸ்திரேலியா மீடியா சதியா...!
x

சேத்தன் சர்மா பேசிய வீடியோவில் அவர் கேமராவை பார்த்து தான் பல விஷயங்களை கூறுவது போல் தெரிகிறது. இதனால் அவர் குடிபோதையில் தம் மனதில் இருந்த விஷயங்களை உளறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மாவை தனியார் டிவி ஒன்று உளவு கேமராவால் ரகசியமாக படம் பிடித்தது அதில் உளறிய சேத்தன் சர்மா இந்திய அணியில் போலி பிட்னஸ் ஊசி பயன்படுத்தப்பட்டது, சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் மற்றும் அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட உண்மைகளை சர்மா வெளிப்படுத் தி உள்ளார்.

இந்த சம்பவம் வெளிவந்து ஒரு நாள் மேலாகியும் பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கருத்து கூட தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ரகசிய கேமரா பதிவு நடந்தது எப்படி என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் சேத்தன் சர்மா குடிபோதையில் பேசியதுதான் சிறப்பே. ஸ்டிங் ஆப்ரேஷன் என்றால் கேமரா மறைவிடத்தில் இருக்கும். அது தெரியாமல் சம்பந்தப்பட்டவர்கள் பேசுவார்கள்.

ஆனால் சேத்தன் சர்மா பேசிய வீடியோவில் அவர் கேமராவை பார்த்து தான் பல விஷயங்களை கூறுவது போல் தெரிகிறது. இதனால் அவர் குடிபோதையில் தம் மனதில் இருந்த விஷயங்களை உளறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்போது சேத்தன் சர்மாவை இப்படிச் சிக்கவைப்பதால் யாருக்கு என்ன பயன்? இந்த கேள்விக்கான பதில் மர்மமாக உள்ளது. ஆஸ்ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து இரண்டு சீசன்களில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. நாக்பூர் டெஸ்டில் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆக்ரோஷத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா நிற்பது கடினம் என்பது அனைவருக்கும் புரிகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை tஹோல்வியடையச் செய்துவிடும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட நேரத்தில் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் வெளியாகி இருப்பது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலியா மீடியா திட்டத்தில் பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாசிக்கி உள்ளாரோ? என்ற சந்தேகமும் தெரிவிக்கப்படுகிறது. வெற்றிக்காக எதையும் செய்யத் தயங்காத ஆஸ்திரேலியா, பிசிசிஐ தேர்வு வாரியத் தலைவரை இந்த வலையில் வீழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது?

சேத்தன் ஷர்மாவின் கருத்துகள் டெஸ்டில் பார்மில் இல்லாத விராட் கோலியை மட்டுமல்ல, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் மற்ற வீரர்களையும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, விளையாட்டைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றி நடக்கும் விவாதம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனதை கடுமையாகப் பாதிக்கும்.

நாக்பூர் டெஸ்டில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த இந்த ஒரு வாய்ப்பு போதும். 'சாண்ட் பேப்பர்' பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் ஆஸ்திரேலியா அதிர்ந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சேத்தன் சர்மாவின் மோசமான இந்த உளறல் இந்திய அணியை காயப்படுத்தும். இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணியை எப்படி மீட்டெடுப்பது என்பது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கையில் உள்ளது.


Next Story