சென்னை: ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை - பெண் உட்பட 22 பேர் கைது
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக பெண் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னையில் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களே எடுத்தது.
இதையடுத்து பேட்டிங் ஆடிய கொல்கத்தா 18.3 ஓவரக்ளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 147 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டரில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான நேற்றையை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக பெண் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ரூ. 62 ஆயிரன் ரொக்கம் மற்றும் 38 ஐபிஎல் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .