இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் சதம்... சாதனை பட்டியல்களில் முன்னேற்றம் கண்ட ரோகித்


இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் சதம்... சாதனை பட்டியல்களில் முன்னேற்றம் கண்ட ரோகித்
x

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா சதமடித்துள்ளார்.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தின் மூலம் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட இந்தியா முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோகித் சாதனை பட்டியல்களில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவைகள்

1. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தரப்பில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சச்சின் - 100 சதங்கள்

2. விராட் கோலி - 80 சதங்கள்

3. டிராவிட்/ ரோகித் சர்மா - 48 சதங்கள்

4. சேவாக்/கங்குலி - 38 சதங்கள்

2. சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அந்த பட்டியல்:-

1. டேவிட் வார்னர் - 49 சதங்கள்

2. சச்சின் - 45 சதங்கள்

3. ரோகித் சர்மா - 43 சதங்கள்

4. கிறிஸ் கெயில் - 42 சதங்கள்

5. ஜெயசூர்யா - 41 சதங்கள்

3.இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. கவாஸ்கர்/ரோகித் - 4 சதங்கள்

2. விஜய் மெர்ச்சண்ட்/ முரளி விஜய்/ கே.எல்.ராகுல் -3 சதங்கள்


Next Story