கரீபியன் பிரீமியர் லீக்; கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ்


கரீபியன் பிரீமியர் லீக்; கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ்
x

Image Courtesy: @amznwarriors

சி.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதின.

ஆன்டிகுவா,

கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பக்கார் ஜமான், இமாத் வாசிம் ஆகியோர் தலா 40 ரன்கள் எடுத்தனர். கயானா தரப்பில் குடகேஷ் மோடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து. அந்த அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 153 ரன் எடுத்திருந்தது. இதையடுத்து அந்த அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது.

இறுதி ஓவரை முகமது அமீர் வீசினார். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. இதையடுத்து இறுதி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை சிக்சருக்கு அடித்த பிரிட்டோரியஸ் கயானா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இறுதியில் கயானா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.


Next Story