டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்து பும்ரா உலக சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.
பர்மிங்காம்,
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் பும்ரா எதிர்கொண்ட ஒரு ஓவரை இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் வீசினார் .அவர் அந்த ஓவரில் 35 ரன்கள் கொடுத்தார்.இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.கொடுத்த பந்துவீச்சாளர் என மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.
மேலும் இந்த ஓவரில் வைட் ,நோ பால் போன்ற எஸ்க்ஸ்டரா ரன்கள் தவிர்த்து பும்ரா இந்த ஓவரில் 29 ரன்கள் அடித்தார்.கடந்த 2003ம் ஆண்டு, ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார் பிரைன் லாரா. அந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் ஜார்ஜ் பெய்லி 2013 ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்கா அணியின் கேசவ் மகாராஜ் 2020 ஆம் ஆண்டு சமன் செய்தார்களே தவிர யாரும் முறியடிக்கவில்லை.
இந்நிலையில், பிராட்டின் ஒரே ஓவரில் 29 ரன் விளாசியதன் மூலம்,ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.