பார்டர்-கவாஸ்கர் தொடர்: ஆஸி. அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாடு திரும்பினார் - காரணம் என்ன..?


பார்டர்-கவாஸ்கர் தொடர்: ஆஸி. அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாடு திரும்பினார் - காரணம் என்ன..?
x

Image Courtesy: ICC Twitter 

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

மும்பை,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்து கொண்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அண்னி தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும் என தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த அணிக்கு பின்னடைவாக எஞ்சிய டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஹேஸ்லேவுட் மற்றும் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 2வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் சொந்த வேலை காரணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அணியுடன் இணைவார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளார் ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்பி உள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து நாடு திரும்புகிறார் என கூறப்பட்டுள்ளது.



Next Story