ஐபிஎல்லை போன்றே டபிள்யூபிஎல்லில் முதல் போட்டியில் 220க்கும் அதிகமாக ரன்களை கொடுத்த பெங்களூரு...வரலாறு திரும்புகிறதா?
ஐபிஎல் தொடரில் பெங்களூரு தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 222 ரன்கள் கொடுத்தது.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடர் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 5 அணிகள் உள்ளன. குஜராத் ஜெயண்ட்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் தொடரில் விளையாடுகின்றன.
இதில் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. ஐபிஎல் பெங்களூரு அணி நிர்வாகமே பெண்கள் பிரிமீபர் லீக்கின் பெங்களூரு அணியையும் வாங்கி உள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது.
இது தான் தற்போது வரை ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 2008ம் ஆண்டு அறிமுகமாக ஆண்கள் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி ஆடிய தொடக்க ஆட்டத்துக்கும், 2023ம் ஆண்டு அறிமுகமான பெண்கள் பிரிமீயர் லீக்கில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமையால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
2008ம் ஆண்டு அறிமுகமாக ஆண்கள் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 222 ரன்கள் விட்டுக்கொடுத்தது. அதை விரட்டி ஆடிய பெங்களூரு 82 ரன்னில் சுருண்டு 140 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
தற்போது பெண்கள் பிரிமீயர் லீக்கில் பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 223 ரன்கள் கொடுத்துள்ளது. இதை விரட்டிய பெங்களூரு அணி 60 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பெங்களூரு அணியும் தனது தொடக்க ஆட்டத்தில் 220க்கும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்துள்ளன.
இதனால் ஆண்கள் ராயல் சேஎலஞ்சர்ஸ் அணியை போலவே பெண்கள் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இருக்குமா? என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். 2008ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வரும் பெங்களூரு அணி தற்போது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.