அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் - மைக்கேல் வாகன்


அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து  அணி நிச்சயமாக வெல்லும்  - மைக்கேல் வாகன்
x

Image Courtesy:AFP

அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை மீண்டும் வெல்லும் என்று சொல்லி இருந்தால் நாங்கள் அவர்களால் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என கூறியிருப்போம். ஆனால், கோடைக்கால டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்த முடிவு தெளிவானது. அடுத்த கோடைக்கால ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படும் என்றார்.

இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும். இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதையும், அவர்களால் எந்த இடத்திலும் அபாயகரமானவர்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு தெரியும். தோல்வி பயம் இல்லாமல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது தற்போதைய இங்கிலாந்து அணியை மிகவும் உற்சாகமான அணியாக மாற்றி உள்ளது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை. மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அழுத்தமில்லாமல் அதிரடியாக விளையாடும் போக்கினை அணியில் பழக்கப்படுத்தி இருக்கின்றனர்.

எல்லா அணிகளும் இந்த மாதிரி அதிரடியாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். கடைசி கோடைக் காலத்தில் இங்கிலாந்து எப்படி டெஸ்ட் போடியை விளையாட வேண்டுமென உலகத்திற்கே தெரிவித்தது. அடுத்த ஆஷஸ் கோப்பையை நிச்சயமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வெல்லும் என்றார்.

இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 2017-18 ஆஷஸ் தொடரை வென்று, 2019 தொடரை சமன் செய்ததுள்ளது .

அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்று ஆஷஸ் கோப்பையை தங்கள்வசம் வைத்துள்ளது.


Next Story