2024 ஐ.பி.எல் தொடரை மார்ச் 22ம் தேதி தொடங்க பி.சி.சி.ஐ திட்டம் - வெளியான தகவல்?


2024 ஐ.பி.எல் தொடரை மார்ச் 22ம் தேதி தொடங்க பி.சி.சி.ஐ திட்டம் - வெளியான தகவல்?
x

கோப்புப்படம்

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

மும்பை,

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி இருந்தது.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் தூமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த தகவலின் படி இந்த வருட ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கும் எனவும் தொடரின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருட ஐ.பி.எல் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என கூறப்படுகிறது. தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ முதலில் அறிவிக்கும். அதன் பின்னர் 2024 பொதுத் தேர்தலுக்கான அட்டவணை வெளியானவுடன் மீதமுள்ள ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story