பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 அறிவிப்பு..!


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 அறிவிப்பு..!
x

image courtesy; AFP

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான பிளேயிங் 11-ஐ ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. அதில், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் 11-ல் இடம் பெற்றிருந்த வீரர்களே மாற்றமின்றி தொடருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;-

கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலேக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்


Next Story