இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் தேவையற்றது - பாக். முன்னாள் வீரர்


இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் தேவையற்றது - பாக். முன்னாள் வீரர்
x

image courtesy;twitter/@BCCI



தினத்தந்தி 18 Sept 2023 2:30 PM IST (Updated: 18 Sept 2023 3:21 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இந்தியா திரும்பி உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது. உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story