இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு


இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
x

 Image Courtesy: AFP

இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது.

நாக்பூரில் 2-வது போட்டி 23-ஆம் தேதியும், இறுதி மற்றும் 3-வது போட்டி 25 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மற்றும் மிட்செல் ஸ்டார்க், ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. நாதன் எல்லிஸ்,டேனியல் சாம்ஸ், சீன் அப்போட்டுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக்கான ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம்: ஆரோன் பின்ச் (கே), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், கேன் ரிச்சர்ட்சன், நாதன் எல்லிஸ்,டேனியல் சாம்ஸ், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா.


Next Story