இங்கிலாந்தை வெளியேற்ற ஸ்காட்லாந்து போட்டியில் ஆஸ்திரேலியா இப்படி விளையாட வாய்ப்பு உள்ளது - ஹேசில்வுட்


இங்கிலாந்தை வெளியேற்ற ஸ்காட்லாந்து போட்டியில் ஆஸ்திரேலியா இப்படி விளையாட வாய்ப்பு உள்ளது - ஹேசில்வுட்
x

Image Courtesy; AFP

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் அந்தப் பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதே பிரிவில் 3 போட்டிகளில் 5 புள்ளிகளை பெற்றுள்ள ஸ்காட்லாந்து 2வது இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகமாக வைத்துள்ளது. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இந்த பிரிவில் 4வது இடத்தில் தவிக்கும் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் இங்கிலாந்து அணியால் 5 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அப்போது ஸ்காட்லாந்து அணியை விட நெட் ரன் ரேட்டில் இங்கிலாந்து சிறப்பாக இருந்தால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். ஸ்காட்லாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 16ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து தங்களுக்கு நாக் அவுட் சுற்றில் தொல்லை கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக தங்களது கடைசிப் போட்டியில் ஸ்காட்லாந்தின் ரன் ரேட் பாதிக்காத அளவுக்கு ஆஸ்திரேலியா வெற்றி காண முயற்சிக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த தொடரில் மீண்டும் ஏதோ ஒரு பகுதியில் இங்கிலாந்தை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். தங்களுடைய நாளில் வெற்றியை பெறக்கூடிய சில டாப் அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் டி20 கிரிக்கெட்டில் அவர்களுக்கு எதிராக உண்மையான தடுமாற்றத்தைக் கொண்டுள்ளோம். எனவே மற்ற அனைவருக்கும் நன்மை பயக்கும் போட்டியிலிருந்து அவர்களை வெளியேற்ற முடிந்தால் அதுவே எங்களுடைய ஆர்வமாகும்.

இருப்பினும் ஸ்காட்லாந்து போட்டி நெருக்கமாக முடியுமா அல்லது இழுக்குமா என்பது எங்களுக்கு தெரியாது. அங்கே சில வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் வெற்றியில் இருந்து நம்பிக்கையை பெறுவது ஒரு வழிமுறை. ஆனால் அதைவிட முக்கியம் இங்கிலாந்து மாதிரியான ஒரு அணியை வெளியேற்றி விடுவது ஆகும். எனவே ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை கடைசிவரை இழுத்துச் செல்வதே இங்கிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பை கடினம் ஆக்கிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story