ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு


ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு
x

Image : PTI 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது

புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்தும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-ந்தேதி பல்லகெலேயில் சந்திக்கிறது. இந்த தொடருக்கு இந்தியா இன்னும் அணியை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஆசிய கோப்பை போட்டிக்கு அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் முதுகு காயத்தில் இருந்து குணமடைந்து அயர்லாந்து தொடரில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறலாம்.


Next Story