ஆசியக் கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சு தேர்வு


ஆசியக் கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சு தேர்வு
x

image courtesy: Pakistan Cricket twitter

பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

சார்ஜா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் 'ஏ' பிரிவில் சார்ஜாவில் இன்று நடக்கும் 6-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. இந்தியா ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறி விட்டது. சூப்பர்4 சுற்றுக்கு வரும் இன்னொரு அணி எது என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்து விடும். பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஒரு நாள் போட்டியில் 3 முறை மோதியுள்ளன. அனைத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story