12 முறை பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்...


12 முறை பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்...
x

பென் ஸ்டோக்ஸ் 2வது இன்னிங்சில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார்

ஐதராபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வந்த இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இறுதியில் இந்திய அணி 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 87 ரன், ராகுல் 86 ரன், ஜெய்ஸ்வால் 80 ரன் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 148 ரன்களும், ரெகன் அகமது 16 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இதில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2வது இன்னிங்சில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார். இந்த விக்கெட்டின் மூலம் அஸ்வின் பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இதனால் அஷ்வினிடம் அதிக முறை ஆட்டமிழந்தவராக பென் ஸ்டோக்ஸ் உள்ளார்.



Next Story