சி.எஸ்.கே வீரர்களுக்கு பிரியாணி விருந்தளித்த அம்பத்தி ராயுடு...வீடியோ வைரல்


சி.எஸ்.கே வீரர்களுக்கு பிரியாணி விருந்தளித்த அம்பத்தி ராயுடு...வீடியோ வைரல்
x
தினத்தந்தி 4 April 2024 2:46 PM (Updated: 4 April 2024 2:51 PM)
t-max-icont-min-icon

சென்னை அணி அடுத்த போட்டியில் பங்கேற்க ஐதராபாத் சென்றுள்ளது.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மட்டும் 1 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இதனையடுத்து சென்னை அணி தனது 4-வது போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணி வீரர்கள் ஐதராபாத் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷிவம் துபே, மற்றும் முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அழைப்பினை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அம்பத்தி ராயுடு வீட்டிற்கு சென்றனர்.

அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். வீரர்கள் பாரம்பரிய ஐதராபாத் பிரியாணியை சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த வீடியோவை சி.எஸ்.கே. நிர்வாகம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story