இந்திய டெஸ்ட் அணியில் விராட், ரோகித்துக்கு இணையாக அவரும் மகத்தான பங்காற்றி வருகிறார் - தமீம் இக்பால்


இந்திய டெஸ்ட் அணியில் விராட், ரோகித்துக்கு இணையாக அவரும் மகத்தான பங்காற்றி வருகிறார் - தமீம் இக்பால்
x

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்சில் 144 - 6 என இந்தியா தடுமாறியபோது சதமடித்து 113 ரன்கள் குவித்த அவர், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சமமாக அஸ்வினும் மகத்தான பங்காற்றி வருவதாக முன்னாள் வங்காளதேச கேப்டன் தமீம் இக்பால் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முழுமையான பேட்ஸ்மேனை போல் புத்திசாலித்தனமாக விளையாடினார். நான் வேறு நாட்டிலிருந்து வந்தவன். இங்கே வரும்போது பெரும்பாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர்களையே நான் கேட்டேன். ஆனால் என்னுடைய கண்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் அவர்களுக்கு நிகராக உள்ளார். சதமடித்து 5 - 6 விக்கெட்டுகளை எடுக்கும்போது மட்டுமே அவரைப் பற்றி நாம் பேசுகிறோம். இந்திய அணிக்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பங்களிப்பு போலவே அஸ்வினின் பங்களிப்பு பெரியது" என்று கூறினார்.


Next Story