5-வது டெஸ்ட்: 3-வது நாளில் ரோகித் களம் இறங்கவில்லை-காரணம் என்ன?
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தர்மசாலா,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 259 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள பி.சி.சி.ஐ 'கேப்டன் ரோகித் சர்மா முதுகுத்தண்டு வலி காரணமாக 3- வது நாளில் களம் இறங்கவில்லை' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.